அணி திரட்டும் அமித் ஷா: தமிழகம் வரும் காரணம் இதுதான்!

அணி திரட்டும் அமித் ஷா: தமிழகம் வரும் காரணம் இதுதான்!

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பஞ்சாபைத் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இது பாஜகவினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 31 மாநிலங்களில், 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அந்த மாநிலங்களையும் பாஜக கைப்பற்ற திட்டமிட்டு வருகிறது. ஆகையால் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலை நடத்த பாஜக தீவிரம் காட்டத் திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வரும் 29-ம் தேதி ஒரு நாள் பயணமாக அமித் ஷா தமிழகம் வர இருக்கிறார். திருச்சி, விழுப்புரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாகத் தமிழக பாஜகவின் சார்பில் மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் திறந்து வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். நேரடியாகக் கோவை செல்லும் அவர், அங்கிருந்தபடியே காணொளி காட்சி மூலம் பாஜக மாவட்ட அலுவலகங்களைத் திறந்து வைக்க இருக்கிறார். அப்போது, பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in