இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு நீக்கப்படும்... தெலங்கானாவில் அமித் ஷா உறுதி

அமித் ஷா
அமித் ஷா

'காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வழங்கிய இஸ்லாமியருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்' என தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் வழங்கிய முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக முடிவுக்கு கொண்டு வருவதோடு, அதற்கு பதிலாக எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார்.

தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி

மேடக் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார். “தெலங்கானாவில் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இங்கு ஊழலில் மூழ்கியுள்ளன. காளேஸ்வரம் ஊழல் முதல் நிலமோசடி வரை டிஆர்எஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை, காங்கிரஸ் கட்சி விசாரிக்கவில்லை. டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோத்து மக்களை ஏமாற்றுகின்றன. மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுங்கள் அவர் தெலங்கானாவை ஊழலில் இருந்து விடுவிப்பார்” என்று அமித் ஷா பேசினார்.

தெலங்கானாவின் பிஆர்எஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு அப்பால் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியையும் அமித் ஷா தாக்கினார். "காங்கிரஸ், டிஆர்எஸ் கட்சிகள் மஜ்லிஸுக்கு பயந்து தெலங்கானா விடுதலை தினத்தை கொண்டாடவே இல்லை. பாஜக மஜ்லிஸுக்கு அஞ்சாததால் தெலங்கானா விடுதலை தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமல்ல காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் நீட்டித்த முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது” என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சந்திரசேகர் ராவ்
சந்திரசேகர் ராவ்

தனது உரை நெடுக சந்திரசேகர் ராவ் கட்சியின் பெயரை டிஆர்எஸ் என்றே அமித் ஷா உச்சரித்தார். டிஆர்எஸ் கட்சியை தொடங்கி மாநில அளவில் வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ், மோடிக்கு எதிரான நிலைப்பாடுக்காக பிஆர்எஸ் என்ற பெயரில் தேசிய கட்சியாக மாற்றி அறிவித்தார். ஆனால் அதனை பொருட்படுத்தாது தனது உரையில் பிஆர்எஸ் கட்சி பெயரை அதன் பழைய அடையாளமான டிஆர்எஸ் என்றே அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in