அமித் ஷாவின் தமிழ்நாடு வருகை திடீர் ரத்து... அதிர்ச்சியில் உறைந்த பாஜக!

மத்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணத்திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழ்நாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ரோடு ஷோ நிகழ்ச்சி பிரச்சாரம் செய்வதற்காக நாளை மாலை தேனி மாவட்டத்திற்கு வருகை தருவதாக கூறப்பட்டிருந்தது.

பாஜக
பாஜக

இதற்காக தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான ஹெலிபேட் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் தேனி ரயில்வே கேட் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பங்களாமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரும்புக் கம்பிகளால் சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தொண்டர்கள் அதன் பின் நின்று ரோடு ஷோ நிகழ்ச்சியை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேனி
தேனி

மேலும் அமித்ஷாவின் கான்வாய் வாகனம் செல்வது போன்று போலீஸாரின் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை காரணமாக தமிழகம் வரும் அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமித்ஷாவின் அடுத்த கட்ட பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in