அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுக்கு 'ஒய்+' பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுக்கு 'ஒய்+' பாதுகாப்பு  வழங்கியது மத்திய அரசு!

மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஏக்நாத் ஷிண்டேவின் முகாமில் இணைந்த 15 அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களுக்கு ஆயுதமேந்திய சிஆர்பிஎப் வீரர்களின் 'ஒய்+' பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கிளர்ச்சி எம்எல்ஏக்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதிய நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆனால், ஏக்நாத் ஷிண்டேவின் இந்தக் குற்றச்சாட்டை மகாராஷ்ட்டிர அரசு மறுத்துள்ளது.

மகாராஷ்ட்டிர மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலரின் அலுவலகங்கள் சிவசேனா தொண்டர்களால் தாக்கப்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனால் அவர்கள் மீண்டும் மகாராஷ்ட்டிரா திரும்புவதில் அவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ள சூழலில் மத்திய அரசு இந்த பாதுகாப்பினை வழங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in