அம்பேத்கருக்குக் காவி உடை, திருநீறு பட்டை: இந்து மக்கள் கட்சி போஸ்டரால் சர்ச்சை

அம்பேத்கருக்குக் காவி உடை, திருநீறு பட்டை: இந்து மக்கள் கட்சி போஸ்டரால் சர்ச்சை

அம்பேத்கரின் 66-வது நினைவு நாளில் அவரை தீவிர இந்து பக்தராக சித்தரிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் இந்தியா முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்: சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்: புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் " எனத் தெரிவித்துள்ளார். அதுபோல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அம்பேத்கரை இந்துவாகச் சித்தரிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கும்பகோணத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் காவி உடையில், நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் அம்பேத்கர் படம் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து உடனடியாக அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன. மேலும் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in