`திமிரில் பேசக்கூடாது'- தெர்மகோல் படத்தைப்போட்டு செல்லூர் ராஜுவை எச்சரித்த அண்ணாமலையின் நண்பர்

`திமிரில் பேசக்கூடாது'- தெர்மகோல் படத்தைப்போட்டு செல்லூர் ராஜுவை எச்சரித்த அண்ணாமலையின் நண்பர்

"இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக்கூடாது என பா.ஜ.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார்" என்று அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி எச்சரித்திருக்கிறார்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே அதிகாரப்போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே கட்சிக்குள் ஆட்களை சேர்ப்பதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து கொண்டனர். முதலில் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை, பின்னர் படிப்படியாக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவதை பார்த்து கொந்தளித்தார்.

அதிமுகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் அண்ணாமலை. இதனால் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் அண்ணாமலையின் வலதுகை என்று அழைக்கப்படும் அமர் பிரசாத் ரெட்டி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் செல்லூர் ராஜுவையும் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்து உள்ளார்.

அதில், "அ.தி.மு.க., தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ. க, தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா!" என்று விமர்சித்திருந்தார். மற்றொரு ட்விட்டில், "இத்தனை நாட்கள் தெர்மகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக்கூடாது என பா.ஜ.வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ’சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா!" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in