`கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா டெல்லி போகிறேன்?'- திருமா மணி விழாவில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

`கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா டெல்லி போகிறேன்?'- திருமா மணி விழாவில் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

"டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன்? கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்? கலைஞர் பிள்ளை நான்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "சகோதரர் தொல் திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவர் போன்று தெரியவில்லை. மேடையில் ஏறினால் 20 வயது போல் சிறுத்தையாக சீறுகிறார். இன்றைக்கு போல 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமாவும் நானும் நெருக்கமாக இருந்திருந்தால், அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன். கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய கூறினார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும் தான். ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார்; கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள்.

இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன். திமுக தனது கொள்கையில் எப்போதும் உறுதியாக இருக்கும். பாஜக, ஆர்எஸ்எஸ் உடன் குறைந்தபட்ச சமரசத்தைக் கூட திமுக செய்துகொள்ளாது. டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன்? கைகட்டி, வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்? கலைஞர் பிள்ளை நான். ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையில் உறவு இருக்கிறதே தவிர, திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே எந்த உறவும் இல்லை.

திமுக 70 ஆண்டுகளைக் கடந்தும் நின்று நிலைத்திருப்பதற்குக் காரணம் அடிப்படைத் தத்துவங்களின் அடித்தளத்தில் நிற்பதால் தான். கோட்டையில் இருந்தாலும் அறிவாலயத்தில் இருந்தாலும் திமுகவின் கொள்கை ஒன்றுதாான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்" என்று ஆவேசமாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in