நான் பிரதமர் வேட்பாளரா? - நிதிஷ்குமார் சொன்ன பளிச் பதில்

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்
Updated on
1 min read

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இருப்பீர்களா என்ற கேள்விக்கு பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பதிலளித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை, டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார், “எனக்கு சிறு வயதில் இருந்தே இடதுசாரிகளுடன் நீண்ட நெடிய தொடர்பு உண்டு, நீங்கள் எல்லோரும் என்னைப் பார்த்ததில்லை, ஆனால் நான் டெல்லிக்கு வரும்போதெல்லாம் இந்த அலுவலகத்துக்கு வருவேன். இன்று நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். அனைத்து இடதுசாரிக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், காங்கிரஸை ஒன்றிணைப்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அது பெரிய விஷயமாக இருக்கும்" என்றார்.

மேலும், பிரதமர் பதவிக்கான ஆசை குறித்து கேள்விக்கு, "இது தவறு. நான் எந்த பதவிக்கும் உரிமை கோருவது இல்லை, எனக்கு அந்த ஆசையும் இல்லை" என்று கூறினார்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வியை சீதாராமன் சீதாராம் யெச்சூரியும் நிராகரித்தார், “2024 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே முதல் நிகழ்ச்சி நிரல். பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வது அல்ல. நேரம் வரும்போது நாங்கள் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து உங்கள் அனைவருக்கும் தெரிவிப்போம். நிதிஷ் குமார் எதிர்கட்சி வரிசைக்கு திரும்பியது இந்திய அரசியலுக்கு ஒரு பெரிய சமிக்ஞை” என்று அவர் கூறினார்.

முன்னதாக நிதிஷ் குமார் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலையும் நிதிஷ்குமார் சந்தித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in