‘கிழிந்த ஆடையுடன் தடுமாறும் ஏழை விவசாயியையும் கொஞ்சம் பாருங்கள்’

உ.பி-யில் ராகுல் சாடல்
உ.பி-யில் பாரத் ஜோடோ யாத்திரை
உ.பி-யில் பாரத் ஜோடோ யாத்திரை

’என்னுடையை ஆடை குறித்தே பேசுவோர், கிழிந்த ஆடையுடன் தடுமாறும் ஏழை விவசாயியையும் சற்று திரும்பி பாருங்கள்’ என்று தனது உபி பாதயாத்திரையின் ஊடாக ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.

டெல்லியை தொடர்ந்து உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபோட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் அங்கமாக பாக்பத் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசினார்.

”ஆளும் பாஜக அரசு மக்கள் மனதில் வெறுப்பையும் கசப்பையும் திணித்து, ஒருவொருக்கொருவரை எதிரிகளாக திருப்புவதன் மூலமாக பயனடைந்து வருகிறது. அவற்றை மாற்றி மக்கள் மத்தியில் அன்பையும், நம்பிக்கையையும் விதைக்கும் முகமாகவே பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வருகிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போதைய பாஜக ஆட்சி விவசாயிகளை தவிக்கவிட்டு, கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. யார் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள் என்பது இதிலிருந்தே தெரிய வரும்.

என்னுடைய ஆடை குறித்தே சதா பேசுவோர், கிழிந்த ஆடைகளோடு அல்லல்படும் ஏழை விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சற்று திரும்பி பாருங்கள். நாட்டின் நடப்பு நிதர்சனம் அவர்களுக்கு அப்போதுதான் புரிய வரும்” என்று பாக்பத் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

ஜன.3 அன்று உத்திரபிரதேசத்தில் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை, அங்கு 3 நாள் நடைபயணத்தை முடித்துக்கொண்டு, ஜன.6 அன்று ஹரியனாவுக்குள் நுழைகிறது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஜன.10 அன்றும், காஷ்மீர் மாநிலத்தில் ஜன.20 அன்றும் பாதயாத்திரை பிரவேசிக்க உள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரில்ஜன.26 அன்று நடைபயணம் நிறைவு செய்யப்பட உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in