அமைச்சர் உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதியுங்கள்! ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம்!

அமைச்சர் உதயநிதி மீது வழக்கு தொடர அனுமதியுங்கள்! ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம்!

"சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும்" என்று ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் ஏ.அஸ்வத்தாமன், ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை கொசுக்கள், டெங்கு, கொரோனா மற்றும் மலேரியாவுடன் ஒப்பிட்டு சனாதன தர்மம் போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் நோக்குடனும், சனாதன தர்மம் மீது வெறுப்பைத் தூண்டிவிடும் வகையிலும், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் உதயநிதி வேண்டுமென்றே பேசியுள்ளார்.

மதத்தின் அடிப்படையில் பகையை வளர்க்கும் அவரது பேச்சு, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமாக அமைகிறது. எனவே, இந்து சனாதன தர்மத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in