2026 தேர்தலில் விஜயுடன் கூட்டணியா?... சீமான் சொன்ன பதில்!

சீமான்
சீமான்

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் 'மே 18 இனப் படுகொலை நாளையொட்டி' இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ சவுக்கு சங்கர் பேசியது தவறு, அதனை மறுக்க முடியாது. குண்டாஸ், கஞ்சா வழக்கு எல்லாம் தவறு. சமூகத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடுகின்றனர். தமிழக காவல்துறை ஏடிஜிபி அருணுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தன் தந்தையைப் பற்றி தவறாக பேசுவதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? எனவே யூடியூபர் சவுக்கு சங்கர் பேசியது தவறு. ஆனால் அவரது பேச்சுக்காக பெலிக்ஸ் என்ன செய்தார். அவரை கைது செய்வதில் என்ன நியாயம்.

சீமான்
சீமான்

கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது அவருக்கு பத்ம பூஷண் விருது கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். கட்சித் தலைவர், நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். திமுக அரசு சாதித்து இருந்தால் மக்கள் தான் பேச வேண்டும். நீங்கள் சொல்லவேண்டாம். இது செயல் அரசோ அல்லது சேவை அரசோ இல்லை, செய்தி அரசுதான். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். நாட்டின் பிரச்னையே அண்ணனும், தம்பியும் சேர கூடாது என்பது தானே. விஜயும், நானும் சந்திப்பதில் என்ன பிரச்னை?' என்று கூறினார்

தொடர்ந்து, 2026-ல் விஜயுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, “விஜய் பாணியில் சொல்கிறேன் ஐயம் வெயிட்டிங் (I'm Waiting)” என்று கூறினார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

மேலும், “வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி, ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதை பற்றி யோசிக்க வேண்டும்.

கோயில், சாமி, சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஜெயிக்க முடியும். பாஜகவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த ஒரு சாதனையைக் கூட சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோயிலை இடித்துவிடுவார்கள், முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வாரி வழங்கிவிடுவார்கள் என பிரதமர் தனது பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல. இதைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கேஜ்ரிவால் கூறியதை போல முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் போன்றோரின் கைது உறுதியாக நடக்கும்” என்று சீமான் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in