`2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்'- நெல்லையில் உறுதிப்படுத்திய ஈபிஎஸ்

ஈபிஎஸ்
ஈபிஎஸ் `2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணித் தொடரும்'- நெல்லையில் உறுதிப்படுத்திய ஈபிஎஸ்

"2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்" என்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு பேசுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும். மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைக்கும் திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. திமுகவுடன் கூட்டணி உள்ள கட்சிகள் இன்னும் சில நாட்களில் காணாமல் போகும்" என்றார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடருமா?என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஈபிஎஸ், "இப்போது பாஜக கூட்டணியில் தானே இருக்கிறோம். அவர்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள். அதிமுக கட்சி யாரை நம்பியும் இல்லை. அதிமுக தான் பல கட்சிகளுக்கு உதவியாக இருக்கிறது. ஈராேட்டில் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாஜகவினர் கலந்து கொண்டார்கள். அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்தவாறு கூட்டணி அமைக்கப்படும். ஆகவே எங்கள் கூட்டணி தொடரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெறும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும். 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in