காய்ச்சல் காரணமாக ’என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை இன்று மீண்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ளார்.
அதிமுகவுடனான கூட்டணி முறிவு ஏற்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திடீர் டெல்லி பயணத்தால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டிருந்த 'என் மண் என் மக்கள்' பயணத்தை ஒத்திவைத்தார். இதனை அடுத்து காய்ச்சல் காரணமாக சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர் தற்போது மீண்டும் நடைபயணத்தை தொடங்க உள்ளார்.
இன்று கோவை மாவட்டம் அவினாசியில் 'என் மண் என் மக்கள்' நடை பயணத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதியிலும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வந்த அண்ணாமலை இந்த பயணத்தின் வாயிலாக அதிமுகவையும் விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.