நீங்கள் காட்டிய வளர்ச்சி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் வெற்றிடம்: ராமநாதபுரம் எம்.பி சாடல்

நவாஸ்கனி எம்பி
நவாஸ்கனி எம்பிநீங்கள் காட்டிய வளர்ச்சி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் வெற்றிடம்: ராமநாதபுரம் எம்.பி சாடல்

நீங்கள் காட்டிய வளர்ச்சி எல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் வெற்றிடமாக உள்ளது என பட்ஜெட் மீதான உரையில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி நவாஸ் கனி சாடியுள்ளார்.

2023-2024 நிதி ஆண்டு பட்ஜெட் அறிக்கை மீதான விவாதத்தில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பேசுகையில்," பட்ஜெட் தாக்கலின் போது ஒரு பெரும் வளர்ச்சி பெரும் சாதனை போன்ற  ஒரு தோற்றத்தை நிதியமைச்சர் ஏற்படுத்த முயன்றார்,  நீங்கள் காட்டிய  வளர்ச்சி எல்லாம்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் வெற்றிடமாக  உள்ளது.

சிறுபான்மை மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் அரசு என்பதை வழக்கம்போல இந்த பட்ஜட்டிலும் நிரூபித்து விட்டது. எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி என இதர சமூக மக்களுக்கான திட்டங்களுக்கு நிதி குறைப்பு செய்து  துரோகம் இழைக்கும் பட்ஜெட்டாக உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட  வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த  வேண்டும். அத்துடன் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என  கோரிக்கை எழுந்த  நிலையில், அதற்கான நிதி ரூ.80 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.60 கோடியாக குறைத்துள்ளது. 

சிறுபான்மை நலத்துறைக்கு கடந்த ஆண்டு ரூ.5,020 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு ரூ. 3,097 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் ப்ரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப்  நிதி  ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. 

சிறுபான்மை ஆராய்ச்சி மாணவர்களுக்கான கலாம் ஆசாத் தேசிய கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை முற்றிலும்  நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் காட்டிய வளர்ச்சி எல்லாம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போல் வெற்றிடமாக உள்ளது" என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in