குடும்பத்திற்காகவும், கமிஷனுக்காகவுமே ஆட்சி: ஜே.பி.நட்டா விளாசல்!

குடும்பத்திற்காகவும், கமிஷனுக்காகவுமே ஆட்சி: ஜே.பி.நட்டா விளாசல்!

பாரதிய ஜனதா கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் தங்கள் குடும்பங்களுக்கு சேவை செய்யவும், கமிஷன் மூலம் சம்பாதிக்கவும்தான் ஆட்சிக்கு வந்ததாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நேற்று 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகங்களைத் திறந்து வைத்து பேசிய ஜே. பி. நட்டா, "பாஜகவைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் குடும்பத்திற்காக உழைத்து கமிஷன் மூலம் சம்பாதிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வரை, பாஜகவில் உள்ள அனைவரும் மக்களுக்கு சேவை செய்யவும், மக்களின் தலைவிதியை மாற்றவும் இரவும் பகலும் உழைக்கிறார்கள்” என தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் சமூகங்களை பிளவுபடுத்துகிறது என்றும், வளர்ச்சி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்றும் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டினார். அவர், “காங்கிரஸுக்கு வளர்ச்சி என்றால் என்ன என்று தெரியாது. அவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் தெரியும். ஆட்சிக்கு வந்து, அதை எப்படி தங்கள் நோக்கத்திற்காக பயன்படுத்தி கமிஷன் மூலம் சம்பாதிப்பது. இதற்கு மேல் காங்கிரஸால் எதுவும் சிந்திக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், "பசவராஜ் பொம்மை மற்றும் அவருக்கு முன் இருந்த எடியூரப்பா போன்ற பாஜக முதல்வர்கள், தாங்கள் செய்த பணிகள் குறித்த அறிக்கையை மக்களிடம் எடுத்துச் செல்கிறார்கள்.

ஆனால், முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது அரசாங்கம் மாநிலத்திற்கு என்ன செய்தது என்று கூற முடியாது, ஆனால், அவர் சமூகங்களை எவ்வாறு பிளவுபடுத்தினார் என்பதை அவரால் விளக்க முடியும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in