நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைக்கலாச்சாரம்: 30-ம் தேதி போராட்டம் அறிவித்த பாமக!

மருத்துவர் ராமதாஸ்.
மருத்துவர் ராமதாஸ்.

போதைப் பொருள்களை ஒழிக்கக்கோரி தமிழகம் முழுவதும் 30-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைக்கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. அதிலும் கல்வி நிறுவனங்களைச் சுற்றியே அதிக போதைப்பொருள்கள் கிடைக்கிறது. விடுதிகளிலும், தனியாக அறை எடுத்துத் தங்கியிருப்போரும் எளிதாக இதற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

இதேபோல் போதை மாத்திரைகளும் தலையெடுக்கிறது, காவல்துறை நினைத்தால் இதை ஒரேநாளில் தடுத்துவிட முடியும். அதைச் செய்யாததால் விலைமதிக்க முடியாத நம் இளைஞர்கள் சீரழிந்துவருகின்றனர். தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகிக்கிறார் ”என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in