நாங்குநேரி விவகாரம்; அனைத்து கல்வி நிலையங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை!

திருமாவளவன்
திருமாவளவன்

’’ஒரு நபர் ஆணையம் நாங்குநேரி விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாங்குநேரி விவகாரத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துக் கொண்டார்.

இந்த ஆர்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘’ நாங்குநேரி விவகாரம் மிகவும் கண்டிக்கத்தக்கது. வெட்டிய மாணவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம். அதனால் அவர்களை சாதி வெறியர்களுடன் ஒப்பிட்டு பேசலாமா என தயக்கமாக உள்ளது. அந்த மாணவர்கள் அறிந்தோ அறியாமலோ இந்த தவறினை அவர்கள் செய்திருக்கலாம். அவர்களுக்கும் ஒளிமயமான எதிர்கால இருக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.

தமிழக அரசுக்கு என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான், நாங்குநேரி விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் இதுபோன்று ஏற்பட்டுள்ள வெறுப்பு அரசியல் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in