அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிறப்பு செங்கற்கள் தயாரிப்பு!

ராமர் கோயில் கட்ட பயன்பட உள்ள செங்கல்
ராமர் கோயில் கட்ட பயன்பட உள்ள செங்கல்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிறப்பு செங்கற்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு செங்கல்லிலும் ஸ்ரீராம் 2023 என்ற பெயர் பொறிக்கப்பட உள்ளது.

உத்தரபிரதேசத்தின் அயோத்தி நகரில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இந்த கோயில் கட்டுமானம் தொடர்பான மாதிரி புகைப்படங்கள் வெளியான நிலையில், டிசம்பர் 30ம் தேதிக்குள் ராமர் கோயில் கட்டுமான பணிகளின் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் என கட்டுமான குழுவின் தலைவர் நிர்பேந்திரா மிஸ்ரா அறிவித்திருந்தார். இந்நிலையில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக ஸ்ரீராம் 2023 என்ற பெயர் பொறித்த சிறப்பு செங்கற்கள் தயாரிக்கும் பணியில் ஸ்ரீராம் செங்கல் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்

இதன் தலைவரான அத்துல் குமார் சிங், இது குறித்து கூறும் போது, சிறப்பு இயந்திரம் ஒன்றின் மூலம் சாதாரண செங்கல்லை விட பலம் வாய்ந்த செங்கலாக இந்த செங்கற்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தனது மூதாதையர் வாசுதேவ் நாராயணன் சிங் என்பவர் 16ம் நூற்றாண்டில் ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு செங்கற்களை உருவாக்கித் தந்தது தெரியவந்ததை அடுத்து, அயோத்தி கோயிலுக்கு சிறப்பு செங்கற்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப்படம்

செங்கற்கள் தயாரிக்கப்பட்ட பிறகு ஆய்வு கூடத்தில் வைத்து அதன் உறுதித் தன்மை ஆராய்ந்த பிறகு அவை கட்டுமான பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் செங்கற்கள் இவ்வாறு தயாரிக்கப்பட உள்ளதாகவும், அதுல் குமார் தெரிவித்துள்ளார். இதில் ஒவ்வொரு செங்கல்லிலும் ஸ்ரீராம் 2023 என்ற பெயர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in