மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு ஆறுதலாக பதில் தந்த கனிமொழி

மதுவிலக்கு குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு ஆறுதலாக பதில் தந்த கனிமொழி

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழியிடம், மதுவிலக்கு குறித்து மாணவி ஒருவர் கேள்வி எழுப்ப கனிமொழி சொன்ன பதில், அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வந்திருந்தார். அவர் இன்று மதியம் தொலையாவட்டத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்னும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாணவிகள், கனிமொழி எம்.பியிடம் கேள்விகேட்க, அவர் பதில் சொல்லி வந்தார்.

அப்போது ஒரு மாணவி, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது என்னும் அரக்கன் சமூகத்தை சீரழிக்கிறதே? எனக் கேட்டார். இதற்கு பதில் அளித்த கனிமொழி, `` சரியான வழிமுறையைப் பின்பற்றி இவ்விஷயத்தில் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் "என்று சொன்னார்

கனிமொழி அளித்த பதில் மாணவிகளுக்கு பெரும் ஆறுதலை தந்தது.

Related Stories

No stories found.