உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தக்கால் நடப்பட்டது

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.


மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி சர்வதேச புகழ் வாய்ந்ததாகும். இவற்றைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவதுண்டு.

இந்நிலையில்  தை முதல் நாள் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு பொங்கல் பண்டிகை ஜன.15-ல் வருகிறது.

அடுத்த இரு நாட்கள் ஜன.16- ல் பாலமேடு, ஜன.17-ல்  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி  நடத்தப்படுகிறது. 
இந்நிலையில், ஜன. 17ல் நடைபெறவுள்ள உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே  முத்தாலம்மன் கோயிலில்  அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கிராம கமிட்டி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in