வாரிசு அரசியல் குற்றச்சாட்டு: பாஜகவுக்கு பதிலடி கொடுத்த அகிலேஷ் யாதவ்!

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

பாஜகவில் இருக்கும் தந்தை மற்றும் மகன்கள், மகள்களின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவின் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவியும் முன்னாள் எம்பியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்பி ரகுராஜ் சிங் ஷக்யா பாஜகவின் சார்பில் களத்தில் உள்ளார். இந்த சூழலில் சமாஜ்வாதி கட்சி மீது பாஜக வாரிசு அரசியல் குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது.

பாஜகவின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள அகிலேஷ் யாதவ், மூத்த பாஜக தலைவர்கள் எடியூரப்பா, ராஜ்நாத் சிங், ராமன் சிங், கைலாஷ் விஜயவர்கியா, பட்னாவிஸ், அவைத்யநாத் போன்றவரின் புகைப்படத்தையும், அவர்களுடைய வாரிசுகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "படம் இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அகிலேஷ் யாதவ் அளித்துள்ள பேட்டியில், “ வாரிசு அரசியல் பற்றிய கேள்விகள் ஏன் பாஜக தலைவர்களிடம் வைக்கப்படவில்லை?" என கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in