அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் twitter

யாதவர், முஸ்லீம் வாக்குகளை குறிவைத்து களமிறங்குகிறார் அகிலேஷ்!

கர்ஹால் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

நீண்ட இடைவெளிக்கு பின் உபியின் தேர்தலில் முதல்முறையாக முக்கியக் கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக ஆளும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் இச்சூழல், எதிர்க்கட்சிகள் இடையேயும் பரவிவிட்டது.

சமீப காலமாக உபியில் முதல்வராக வருபவர்கள் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. பெரும்பாலும் மக்களவை எம்.பியாக இருக்கும் இவர்கள் தம் கட்சியின் வெற்றிக்கு பின் உபியின் மேல்சபை வழியாக முதல்வராகி விடுகிறார்கள். இதன் மீது உபிவாசிகள் எழுப்பிய கேள்விகளை அம்மாநில முதல்வர் யோகி சவாலாக ஏற்றிருந்தார். இந்தமுறை தாம் போட்டியிடுவதாக அறிவித்து அதற்காகத் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரின் நகர தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

இதனால், சமாஜ்வாதியின் முதல்வர் வேட்பாளரான அகிலேஷ் யாதவும் போட்டியிடத் தயாராகி இருந்தார். இதற்காக தனது வெற்றியை உறுதி செய்யும் தொகுதியை அவர் தேடிக் கொண்டிருந்தார். அந்த வகையில் ஆஸம்கர் மாவட்டத்தின் கோபால்பூர் தொகுதி கருதப்பட்டது. இங்கு யாதவர்களுடன், முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர். ஆஸம்கரின் மக்களவை தொகுதியா எம்பியாகவும் அகிலேஷ் தற்போது பதவி வகிக்கிறார். எனினும், இதைவிடப் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட கர்ஹால் தொகுதியை அகிலேஷ் தேர்வு செய்து விட்டார்.

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மெயின்புரி மாவட்டத்தின் கர்ஹாலில், அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். யாதவர் அதிகம் வாழ்வதால் சமாஜ்வாதி தலைவரான அவரது வெற்றிக்கு இது பாதுகாப்பானத் தொகுதியாகக் கருதப்படுகிறது. மெயின்புரியின் மக்களவை தொகுதி 2002 முதல் சமாஜ்வாதியிடம் உள்ளது. 2002ல் மட்டும் ஒருமுறை பாஜக இங்கு வென்றிருந்தது. தற்போது இதன் மக்களவை எம்.பியான சமாஜ்வாதி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் உள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ் twitter

இதன் சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றான கர்ஹாலில் முலாயமின் மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக இன்று அறிவித்துள்ளார். 2017 இல் பாஜக அலை வீசிய போதும், கர்ஹாலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். இது கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான வாக்கு வித்தியாசம் ஆகும். இம்மாவட்டத்தின் மற்ற நான்கு தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது.

இதற்கு கடந்த தேர்தலில் முலாயமின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ் சமாஜ்வாதியிலிருந்து வெளியேறி தன் புதிய கட்சியில் தனித்து போட்டியிட்டிருந்தார். இதனால், மெயின்புரி உள்ளிட்டப் பல தொகுதிகளில் சமாஜ்வாதியின் வாக்குகள் சிதறின. இந்த தேர்தலில் உபியின் மற்றொரு முன்னாள் ஆளும் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தும் சமாஜ்வாதிக்கு பலனளிக்கவில்லை.

எனவே, கர்ஹாலில் சமாஜ்வாதிக்கு கிடைத்த குறைவான வாக்கு வித்தியாசத்தால் அகிலேஷை எப்படியும் தோற்கடிக்கலாம் என பாஜக கருதுகிறது. இவருக்காக முலாயம்சிங்கை மக்களவை தேர்தலில் எதிர்த்த பாஜக வேட்பாளர் பிரேம்சிங் ஷக்கியாவை போட்டியிட வைக்கத் திட்டமிட்டு வருகிறது. இவரது போட்டியால் முதல்வர் யோகியின் கோரக்பூர் தொகுதியை விட கர்ஹாலின் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in