அஜித் பவார் துணை முதல்வரானார்; 9 என்சிபி எம்எல்ஏக்கள் அமைச்சர்களானார்கள்: சரத் பவாருக்கு உச்சகட்ட அதிர்ச்சி!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், 9 கட்சி எம்எல்ஏக்களுடன் இன்று மகாராஷ்டிர அரசில் இணைந்தார். இனிஅஜித் பவார் துணை முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் பகிர்ந்து கொள்வார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றார். மேலும், சகன் புஜ்பால், திலீப் வால்சே பாட்டீல், அதிதி தட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பன்சோட், தர்மராவ் பாபா அத்ரம், மற்றும் அனில் பைதாஸ் பாட்டீல் ஆகிய என்சிபி எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிர அமைச்சராக பதவியேற்றனர்.

மொத்தமுள்ள 53 என்சிபி எம்எல்ஏக்களில் 43 பேரின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் பவாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சரத் பவார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in