ஏக்நாத் ஷிண்டேவின் கீழ் பணியாற்றுவதால் பட்னாவிஸ் மன அழுத்தத்தில் உள்ளார்: சஞ்சய் ராவத் சொல்லும் புது விஷயம்!

ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ்
ஏக்நாத் ஷிண்டே-பட்னாவிஸ் ஏக்நாத் ஷிண்டேவின் கீழ் பணியாற்றுவதால் பட்னாவிஸ் மன அழுத்தத்தில் உள்ளார்: சஞ்சய் ராவத் சொல்லும் புது விஷயம்!

ஜூனியரான ஏக்நாத் ஷிண்டேவின் கீழ் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மன அழுத்தத்தில் இருப்பதாக சிவசேனா (யுபிடி) எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவின் எம்.பி சஞ்சய் ராவத் அளித்தப் பேட்டியில், “தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கெனவே முதலமைச்சராக இருந்து, அவரை விட இளையவரின் கீழ் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய மனநிலை நிச்சயமாக சரியில்லை. நாங்கள் உண்மையைப் பேசுகிறோம், மக்களுக்காகப் போராடுகிறோம் என்பதே பிரச்சினை. மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள், அதனால்தான் இத்தகைய தலைவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிக மனச்சோர்வு மிகவும் மோசமானது" என்று கூறினார்.

மேலும், “அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி 180-185 இடங்களிலும், மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 இடங்களிலும் வெற்றி பெறும். நாங்கள் அனைவரும் ஒன்றாக மகா விகாஸ் அகாதியில் இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்த விவாதம் நடைபெறும் வரை எம்விஏ இருப்பதில் சில நிச்சயமற்ற நிலை இருக்கும் என்று சரத் பவார் கூறியிருந்தார். ஆனால் எம்விஏ கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று நேற்று தெளிவுபடுத்தினார். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அது மாநிலத் தேர்தலாகவோ அல்லது மக்களவைத் தேர்தலாகவோ இருந்தாலும், 2024ல் மகா விகாஸ் அகாதி ஒன்றாகப் போராடும்.

என்சிபியின் உயர்மட்ட தலைவர் அஜித் பவார், அவர் உயிருடன் இருக்கும் வரை என்சிபியில் இருப்பேன் என்று நேற்று ஊடகங்களுக்கு தெளிவாக கூறினார். அவரைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன, இது அவரது குடும்பக் கட்சி, அவர் அடிமையாக பணியாற்ற எங்கு செல்வார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in