`பெரியார் பெயரில் விமான சேவை தொடங்கலாம்'- எகிறிய டிக்கெட் விலையால் தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்த எம்எல்ஏ

`பெரியார் பெயரில் விமான சேவை தொடங்கலாம்'- எகிறிய டிக்கெட் விலையால் தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்த எம்எல்ஏ

`பெரியார் பெயரில் விமான சேவை தொடங்கலாம்' என்று தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார் திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கான விமான டிக்கெட் விலை 17 ஆயிரத்து 748 ரூபாயில் இருந்து 20 ஆயிரத்து 665 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டி உள்ள டி.ஆர்.பி.ராஜா, இந்த தொகைக்கு சிங்கப்பூருக்கே போக முடியும் என்று கூறியுள்ளார்.

பெரியார் என்ற பெயரில் தமிழக அரசு விமான சேவை நிறுவனத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பெரியார் தமிழ்நாட்டின் சமத்துவ வளர்ச்சிக்கு சிறகுகள் கொடுத்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரியார் என்ற பெயர் கொண்ட விமானத்தின் படத்தையும் டி.ஆர்.பி.ராஜா பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in