
காசா, இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு நவம்பர் 2ம் தேதி வரை விமான சேவையை ரத்து செய்வதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து காசாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தின் கீழ் தனி விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். போர் காரணமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் பயணிகள் விமானங்கள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், நவம்பர் 2-ம் தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!
நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!
நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!