அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக சேர்ந்த கட்சி- உற்சாகத்தில் தொண்டர்கள்

அதிமுக பொதுச்செயலாளருடன் ஏ.ஐ.எம்.ஐ.எம் நிர்வாகிகள் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளருடன் ஏ.ஐ.எம்.ஐ.எம் நிர்வாகிகள் சந்திப்பு

அதிமுக கூட்டணியில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அதிமுக வெளியேறியது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வந்த கருத்துக்கள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறுவது என அதிமுக முடிவு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு கட்சித் தலைவர்களும் அதிமுகவுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு

இந்த நிலையில் அசாதுத்தீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி நிர்வாகிகள் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக தேர்தல் நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அதிமுக சட்டமன்றத்தில் விவாதம் எழுப்பி இருந்த நிலையில் இஸ்லாமிய கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in