இது வெற்று விளம்பர ஆட்சி... மூன்றாண்டு திமுக அரசு குறித்து அண்ணாமலை காட்டம்!

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழ்நாட்டில் நடக்கும் மூன்றாண்டு கால  திமுக ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுகவுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. நடப்பு மக்களவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி என்று சொல்லும் வகையில் கடுமையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து திமுகவை கடுமையாக தாக்கிப் பேசுகின்றனர்.

அதே போல முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட  திமுக தலைவர்கள் பாஜகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் 'எத்தனை பொய்களை தான் நாடு தாங்கும், எங்கள் காதுகள் பாவம் இல்லையா என்று பாஜகவின் பொய் கணக்கை பட்டியலிட்டு விமர்சித்துள்ளார்.

பாஜக தேர்கல் அறிக்கை
பாஜக தேர்கல் அறிக்கை

அதில், '18.5 லட்சம்  கோடியை உத்தரப் பிரதேசத்துக்கு அள்ளிக் கொடுத்துள்ள மத்திய பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு 5.5 லட்சம் கோடியை  மட்டுமே  கிள்ளிக் கொடுத்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட நிதி எவ்வளவு என பாஜக அமைச்சர்கள் விளக்க முன்வர வேண்டும் என்று கேட்டிருந்தார்.  மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ1960 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார். "2026ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட போவது உறுதி. இது மோடியின் கேரண்டி. தமிழ்நாட்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி மட்டுமே மத்திய அரசு கொடுத்துள்ளதாக உதயநிதி பேசியிருந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் ரூ.5.5 லட்சம் கோடி எனக் கூறி இருக்கிறார். முதலில் மத்திய அரசு எத்தனை கோடி கொடுத்தது என்பதை முதலில் உங்களுக்குள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்.

மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களுக்கும் திமுக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது. திமுகவின் மூன்றாண்டு ஆட்சிக்காலம் வெற்று விளம்பரத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார். காலையில் முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு மதியமே அண்ணாமலை சுடச்சுட பதிலளித்துள்ளது அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in