எய்ம்ஸ் செங்கலைத் தொடர்ந்து 'நீட் முட்டை’... புதிய கெட்டப்பில் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தொடங்கப்பட்டுள்ள நீட் கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சியில், எய்ம்ஸூக்கு செங்கல்லை காண்பித்ததைப் போல் நீட் தேர்வுக்கு முட்டையை காண்பித்து விமர்சித்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அதுமட்டுமின்றி கண்ணாடியுடன் புதுக்கெட்டப்பில் வந்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி திமுக இளைஞர் அணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் கலந்து கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு தன்னுடைய கையெழுத்தையும் பதிவிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ‘’நீட் விலக்கு அளிக்ககோரி திமுக எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பில் அதிமுகவும் கலந்து கொள்ள வேண்டும். நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் மனதை புரிந்துகொள்ள ஒன்றிய அரசு மறுக்கிறது. நீட் விலக்கு மசோதா 21 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்துக் கிடக்கிறது.

தமிழக மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நீட் தற்கொலைகள் தொடர்கிறது. நீட் வந்தால் தரமான மருத்துவர்கள் வருவார்கள். மருத்துவப் படிப்புக்கு பணம் தேவையில்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், தற்போது நீட் முதுநிலை படிப்பு தகுதித்தேர்வில் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?'' என தான் கையோடு எடுத்து வந்திருந்த முட்டையை காண்பித்து கேட்டார். அந்த முட்டையில் நீட் என எழுதியிருந்தது. தொடர்ந்து பேசிய அவர் 'முட்டை' மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள்.

ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் இந்த 'நீட் விலக்கு' கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம். நீட் ஒழிப்புக்காக சேர்ந்து போராட அதிமுகவும் வாருங்கள். அதற்கான கிரெடிட்டை நீங்களே கூட எடுத்துக் கொள்ளுங்கள்.

நீட் ஒழிந்தால் போதும். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஒன்றும் செய்ய இயலவில்லை என்றீர்கள். தற்போது கூட்டணியை விட்டு வெளியேறி விட்டீர்கள். எனவே நீட்டுக்கு எதிராக போராட முன்வாருங்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமைக்கான இந்த கையெழுத்து இயக்கத்தில், அதிமுகவும் பங்கேற்று கையெழுத்திட வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி கண்ணாடி அணிந்து புதிய கெட்டப்பில் வந்ததது அனைவரையும் கவர்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in