பால் கூட்டுறவு சங்க பணத்தில் 'கை’ வைத்த அதிமுக பெண் நிர்வாகி: அதிரடி காட்டிய ஆவின் நிர்வாகம்

பால் கூட்டுறவு சங்க பணத்தில் 'கை’ வைத்த அதிமுக பெண் நிர்வாகி: அதிரடி காட்டிய ஆவின் நிர்வாகம்

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அதிமுக பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் குமுதவள்ளி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையம் பகுதியில், ஆரணி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மகளிரணி மாவட்டச் செயலாளர் குமுதவள்ளி தலைவராகவும், 11 பேர் நிர்வாகக்குழு உறுப்பினராக இருந்து வந்தனர்.

கடந்த 2019-20-ம் ஆண்டு இந்த பால் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து சென்னைக்கு அனுப்பிய பாலில் அதிக அளவு தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருந்த காரணத்தால், அந்த பாலை சென்னை அலுவலகத்திலிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக ஆவின் நிறுவனம் அபராதம் விதித்தது.

இதனையடுத்து பால் கூட்டுறவுச் சங்கத்தில் விற்பனை, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றில் சங்கத் தலைவர் குமுதவள்ளி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சங்க உறுப்பினர்கள் முதலமைச்சரின் தனிப் பிரிவினருக்குப் புகார் மனு அளித்தனர்.

இது தொடர்பாகச் சென்னை கூடுதல் பால் ஆணையர் உத்தரவின் பேரில் ஆரணி பால் கூட்டுறவுச் சங்கத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பால் கொள்முதல் செய்தது, நிர்வாகத்தில் பணம் கையாடல், பாலில் தண்ணீர் கலந்தது உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேடுகளில் குமுதவள்ளி ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை ஆவின் கூடுதல் ஆணையர், ஆரணி பால் கூட்டுறவுச் சங்கத் தலைவர் குமுதவள்ளி பதவி நீக்கம் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in