தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி!- சசிகலா தடாலடி பேட்டி

தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி!- சசிகலா தடாலடி பேட்டி
சசிகலா

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெறும்" என்று சசிகலா தடாலடியாக கூறினார்.

பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாளையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அறிக்கைவிடும் வி.கே. சசிகலா மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவில் உள்ளவர்கள் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. தேர்தலுக்கு பின்னர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெறும்" என்று தடாலடியாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "கடந்த 8 மாத கால திமுக ஆட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும். அதிமுகவில் உள்ளவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம்" என்று சசிகலா அதிரடியாக பேட்டி அளித்தார்.

சசிகலாவுக்கு 100 சதவிகிதம் அதிமுகவில் இடம் கிடையாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in