ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு: கொந்தளிக்கும் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு: கொந்தளிக்கும் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள்!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன், ஒரே பத்திரப்பதிவு உள்ளிட்டவற்றை அமல்படுத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஒரே ரேசன் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வட மாநிலங்களில் இருப்பவர்கள் தமிழகத்தில் எங்கு இருந்தாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

இதேபோல் பல்வேறு அதிரடி திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டம் ஆகும். இந்த நிலையில் இந்திய சட்ட ஆணையம் அண்மையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை குறித்து ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ், திமுக இடதுசாரிகள், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய சட்ட ஆணையத்துக்கு அதிமுக ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டிருந்த கடிதம் இந்த சட்ட ஆணையத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. "ஒரே நாடு, ஒரே தேர்தல் நடந்தால் அதிமுகவில் உள்ள 60 எம்எல்ஏக்களும் இல்லாமல் போய்விடுவார்கள்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். மேலும், இது குறித்து கருத்து தெரிவிக்க அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துவிட்டார். காங்கிரஸ், இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து உள்ளனர். பாஜக இதனை வரவேற்று இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in