என்னாச்சி... என்னாச்சி... ஸ்டாலின் அண்ணாச்சி சொன்னது என்னாச்சி?

மதுரை ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் கோஷம்
செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்
செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மதுரை பெத்தானியபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை தாங்கினார்.

இதேபோல மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டி மந்தைத் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயகுமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

ராஜன் செல்லப்பா  தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்
ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டங்களில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததையும், சொத்து வரியை உயர்த்தியதையும் கண்டித்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, "என்னாச்சி... என்னாச்சி... ஸ்டாலின் அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி?", "வேதனையாச்சு... வேதனையாச்சு... திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களின் வாழ்க்கையே வேதனையாச்சு...", "ஒழிப்போம்... ஒழிப்போம்... விடியா அரசின் அராஜகத்தை ஒழிப்போம்", "ஸ்டாலின் அரசே... ஸ்டாலின் அரசே... பாதுகாப்பு கொடு பாதுகாப்பு கொடு பெண்களுக்குப் பாதுகாப்பு கொடு" என்பது போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in