ஓபிஎஸ் வழக்கை உடனே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் வழக்கை உடனே விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால  தடையை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் 15ம் தேதி விசாரிக்கப்படும் என  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானத்துக்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுகவின் பெயர், சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்காலத்  தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கடந்த 8ம் தேதி ஓ.பி.எஸ். சார்பில் முறையிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால், மனு இன்று பட்டியலிடப்படாத நிலையில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என தெரிவித்தார். இன்றே விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

முறையீடு செய்யப்பட்ட அன்றே மனுத் தாக்கல் செய்யாத நிலையில் எப்படி இன்று விசாரணைக்கு எடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே... பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in