ஈபிஎஸ் கையில் அதிமுக அலுவலக சாவி: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஓபிஎஸ் மனு தொடர்பாக விசாரித்த தலைமை நீதிபதி, வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார். மேலும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சீல் வைத்த வருவாய்துறைக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக ஜூலை 11ம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இருதரப்பு மோதலை அடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறை சீல்வைத்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலக சாவியை ஈபிஎஸ்சிடம் ஒப்படைக்க ஜூலை 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in