கறுப்பு சட்டையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: எடப்பாடி பழனிசாமி தடுப்பு காவலில் வைப்பு!

கறுப்பு சட்டையுடன் வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: எடப்பாடி பழனிசாமி தடுப்பு காவலில் வைப்பு!

தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஓபிஎஸ் அணி- இபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. இதனிடையே எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்து வருகிறார். அவரை மாற்றிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் அப்பாவிடம் கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தங்களுடைய கருத்தை கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பு கடிதங்களையும் பரிசீலனை செய்வதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இதனுடைய தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சபாநாயகரை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் குறித்து பேசினர். அப்போது இது குறித்து சட்டசபையில் தெரிவிப்பதாக சபாநாயகர் கூறினார். இதையடுத்து, சட்டசபை கூட்டம் தொடங்கியதும் எடப்பாடி பழனிசாமி இந்த பிரச்சினையை எழுப்பினார். அப்போது சபாநாயகர், கேள்வி நேரம் முடிந்தவுடன் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டு வந்தனர். இதை அடுத்து அவர்களை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகரின் செயலை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என்று ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்ததார். இந்த உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி சென்னை காவல்துறை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்தனர். இந்த மனுவை பரிசீலனை செய்த காவல்துறையினர் சட்ட, ஒழுங்கு பிரச்சினையை காரணமாக வைத்து உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கறுப்பு சட்டையுடன் வள்ளுவர் கோட்டத்திற்கு சொல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். அப்போது அரசுக்கு எதிராகவும், சபாநாயகருக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பரபரப்புடன் காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in