மொதல்ல உங்க பஞ்சாயத்தைப் பாருங்க அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலைகொதிக்கும் அதிமுகவினர்

அண்ணாமலை டெல்லி சென்று திரும்பிய கையோடு ஈபிஎஸ்ஸையும் ஓபிஎஸ்ஸையும் சந்தித்து சமரசத் தூது பேசினார். அத்தோடு நிற்காமல், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று அண்ணாமலை சொன்னது அதிமுக வட்டாரத்தை ரொம்பவே சூடாக்கிவிட்டதாம்.

இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்று சொன்னார். “பாஜகவை பற்றி மக்களுக்கும் தெரியும் எங்களுக்கும் நல்லாவே தெரியும். அதனால் நாங்கள் பாஜகவிடம் எச்சரிக்கையாகவே இருக்கிறோம்” என்று பொளேர் கொடுத்தார் பொன்னையன்.

இவ்வளவுக்கும் பிறகும் அதிமுகவை தாங்கள்தான் ரட்சிக்க வந்தவர்களாக அண்ணாமலை அண்ட் கோ காட்டிக்கொள்வது அதிமுகவினரை இன்னும் கொதிக்க வைத்திருக்கிறது.

“நாங்கள் பலமாகத்தான் இருக்கிறோம். ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அதனால் பாஜகவினர் எங்களைப்பற்றி கவலைப்பட வேண்டாம். முடிந்தால்,  காயத்ரி ரகுராம்,  திருச்சி சூர்யா போன்றவர்களை மீண்டும் பாஜகவில் சேர்க்கமுடியுமா என்று பாருங்கள். கேசவ விநாயகனுக்கும் உங்களுக்கும் இருக்கிற பிணக்குகளை தீர்க்கமுடியுமா என்று பாருங்கள். கமலாலயத்தில் இருக்கும் அமைச்சர் எல்.முருகனின் வார் ரூமுடன் இருக்கும் மனக்கசப்புகளை மறக்கப் பாருங்கள். இதையெல்லாம் சரிசெய்துவிட்டு எங்களுக்கு மத்தியஸ்தம் பண்ண வரலாம்” என்று டீக்கடை பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அதிமுககாரர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in