12 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கியது திமுக... புலம்பும் அதிமுகவினர்: காரணம் இதுதான்

திமுகவில் ஐக்கியமான அதிமுக கவுன்சிலர்கள்
திமுகவில் ஐக்கியமான அதிமுக கவுன்சிலர்கள்

அதிமுக வசம் இருந்த தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வழியாக இன்று பறிக்கப்பட்டது. இதனால் அதிமுக வசம் இருந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி பறிபோனது. இதை திமுக ஸ்கெட்ச் போட்டு தூக்கியதாக அதிமுகவினர் புலம்பிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 12 வார்டுகளிலும், திமுக 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது. அதிமுக சார்பில் சத்யா என்பவர் இங்கு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். திமுகவில் கனிமொழி எம்.பியாக இருந்தும், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் என இரண்டு அமைச்சர்கள் மாவட்டத்தில் இருந்தும் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி அதிமுக வசம் இருந்தது திமுகவினருக்கும் ரொம்பவே குடைச்சலைத் தந்தது. இந்நிலையில் தான் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 12 மாவட்டக் கவுன்சிலர்களில் ஏழு பேர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் சத்யா மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடந்து தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இப்போது திமுகவுக்குள் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு கவுன்சிலர்கள் முட்டிமோதி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர்களை திமுக குதிரை பேரத்தின் மூலம் வாங்கிவிட்டதாக அதிமுகவினர் புலம்பிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in