அதிமுகவினரை அழைத்து வந்த செந்தில் பாலாஜி: ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

அதிமுகவினரை அழைத்து வந்த செந்தில் பாலாஜி: ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, தமாகாவை சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு அணியாக பிரிந்து கிடக்கும் நிலையில், யாருடன் இணைந்து செயல்படுவது என்று தெரியாமல் அதிமுக தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஓபிஎஸ், ஈபிஎஸ், டி.டி.வி.தினகரன், சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவை ஜெயலலிதா கட்டி காத்துவந்த நிலையில், அதிமுக இப்படி பிரிந்து கிடப்பதால் தொண்டர்கள் வேதனையடைந்துள்ளனர். இதனிடையே, அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி அதிமுக மற்றும் தமாகவை சார்ந்த மாற்றுக்கட்சியினர் திமுகவில் இன்று இணைந்தனர். அதன்படி, அதிமுகவை சேர்ந்த தோகமலை ஒன்றிய துணை பெருந்தலைவர் பாப்பாத்தி சின்னவழியான், நாவலூர் ஊராட்சி 14-வது வார்டு உறுப்பினர் தனலட்சுமி சங்கர், கல்லடை ஊராட்சி 9-வது வார்டு உறுப்பினர் வீ.வளர்மதி ஆசைக்கண்ணு, தோகமலை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் டி.சின்னவழியான், கல்லடையைச் சேர்ந்த என்.ஆசைக்கண்ணு, நாகனூரை சேர்ந்த எம்.சங்கர், குளித்தலை ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.சத்திய குட்டி மோகன் (தமாகா), குளித்தலை 9-வது வார்டை சேர்ந்த ராஜேஸ்வரி, குளித்தலை 10-வது வார்டை சேர்ந்த அறிவழகன், குளித்தலை சேர்ந்த குட்டி மோகன் (தமாகா) ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அப்போது, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மாணிக்கம் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in