முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப் பதிவு

கள்ள ஓட்டு விவகாரத்தில் திமுக நிர்வாகியை அரைநிர்வாணமாக இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது வழக்குப் பதிவு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டுப் போட வந்ததாக, திமுக நிர்வாகியை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, வண்ணாரப்பேட்டை 49-வது வார்டு மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் இளைய அருணா, அதிமுக சார்பில் ஏ.டி அரசு, பாஜக சார்பில் வன்னியராஜ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். அப்போது வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில், திமுக வேட்பாளர் இளைய அருணா தலைமையில் திமுகவினர் 49-வது வார்டு வாக்குசாவடிகளை கைப்பற்றி, கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு வந்த அதிமுக மற்றும் பாஜகவினர், திமுகவினரை தட்டிக்கேட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திமுகவினர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகன், பாஜக பிரமுகர் ராமையா ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், திமுகவைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கி அவரை அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த நரேஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதனும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இருவரின் புகார்களின் பேரில் தண்டையார்ப்பேட்டை போலீஸார், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல், ஆபாசமாக பேசுதல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உட்பட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் அதிமுக புகாரில் அடையாளம் தெரியாத திமுகவினர் 10 பேர் மீதும், போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in