விசாரணைக்கு வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஓபிஎஸ்

விசாரணைக்கு வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு: அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஓபிஎஸ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுக்குழுக்கு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ஜே.டி.சி.பிரபாகர் மற்றும் ஆதரவாளர்கள் கிருஷ்ணன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதுடன், அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in