ஒற்றுமையாக செயல்பட்ட அதிமுக, அமமுக கவுன்சிலர்கள்

சொத்துவரி உயர்வை கண்டித்து கூட்டாக வெளிநடப்பு
ஓபிஎஸ் தம்பி தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர்
ஓபிஎஸ் தம்பி தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, பெரியகுளம் நகராட்சியில் அதிமுக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் ஒற்றுமையாக வெளிநடப்பு செய்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி கூட்டம் இன்று நடந்தது. நகராட்சித் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சொத்து வரி உயர்வை கண்டிக்கும் வகையில், கூட்டத்துக்கு கருப்புச் சட்டையுடன் வந்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.சண்முகசுந்தரம் தலைமையில் நகராட்சி கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

வெளியே வந்து பேட்டிகொடுத்த அவர்கள், திமுக அரசு 150 சதவீத அளவுக்கு சொத்து வரியை உயர்த்தியிருப்பதால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், அதனை கண்டித்தே வெளிநடப்பு செய்திருப்பதாகவும் கூறினர். தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திர நாத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியகுளம் நகரில் ரூ.22.50 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதிமுக கவுன்சிலர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பால்பாண்டி, வெங்கடேசன், பாமக கவுன்சிலர் குமரன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in