ஹைதராபாத்தில் நாளை பாஜகவின் செயற்குழு கூட்டம்...இன்றே அதிர்ச்சி கொடுத்த சந்திரசேகர ராவ்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்Hindu கோப்பு படம்

ஹைதராபாத்தில் நாளை தொடங்கவுள்ள இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனை சேர்ந்த 4 மாமன்ற உறுப்பினர்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்து அதிர்ச்சியளித்துள்ளனர்.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஹஸ்தினாபுரம் கார்ப்பரேட்டர் பானோத் சுஜாதா நாயக், ராஜேந்திரநகர் கார்ப்பரேட்டர் பொடவு அர்ச்சனா பிரகாஷ், ஜூப்ளி ஹில்ஸ் கார்ப்பரேட்டர் வெங்கடேஷ் மற்றும் அடிக்மெட் கார்ப்பரேட்டர் சுனிதா பிரகாஷ் கவுட் மற்றும் தந்தூர் மாநகராட்சி பாஜக தள தலைவர் சிந்துஜா கவுட், தந்தூர் கவுன்சிலர் அகமது ஆசிப் ஆகியோர் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தனர்.

தேசிய செயற்குழு கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில் பாஜக மாநகராட்சி உறுப்பினர்கள் டிஆர்எஸ் கடசியில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பேசிய தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், “இந்த மாநகராட்சி உறுப்பினர்கள் மற்ற அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்டபோதும் பாஜகவால் வாய்ப்பளிக்கப்பட்டவர்கள். எங்கள் கட்சி அவர்களை ஆதரித்ததால் தான் வெற்றி பெற்றனர். இப்போது அவர்கள் விலகியிருந்தாலும் பரவாயில்லை பாஜகவுக்கு ஆதரவு அபரிமிதமாக அதிகரித்துள்ளது” என்று கூறினார். சமீபத்தில்தான் கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் அனைத்து பாஜக கார்ப்பரேட்டர்களும் புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

2020 டிசம்பரில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆளும் டிஆர்எஸ் கட்சி பெரும் அடியை சந்தித்தது, அதன் 50 சதவீத இடங்களை பாஜகவிடம் இழந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in