இலங்கைத் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்பந்தம்: அண்ணாமலை தகவல்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைஇலங்கைத் தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்ட ஒப்பந்தம்: அண்ணாமலை தகவல்

இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4 ஆயிரம் வீடுகள்கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில்," சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in