சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பா, ஆதரவா?- விமர்சனத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு அதிரடி பதில்

சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பா, ஆதரவா?- விமர்சனத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு அதிரடி பதில்

சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை குற்றம்சாட்டி வந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவையில் 8 வழிச் சாலை தொடர்பான விவாதத்தில் முதல்வர் பேசியபோது, பிரச்சினைகளை அலசி பார்த்து அதனை சரி செய்யப்படும் என்றார். நிலம் கொடுப்பவர்களுக்கு மார்க்கெட் விலையில் பணம் கொடுங்கள் என்று முதல்வர் என்னிடம் சொன்னார். நாங்கள் திட்டத்திற்கு எதிரிகள் கிடையாது. ஏற்கெனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை போட்டு இருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்தி இருக்கிறோம். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். நீங்கள் போக வேண்டிய வாகனம், நான் போக வேண்டிய வாகனம் நாளுக்கு நாள் உற்பத்தி ஆகி கொண்டே இருக்கிறது. அப்படி என்றால் என்ன செய்ய முடியும். சாலை விரிவுபடுத்ததான் வேண்டும். அப்படி என்றால் நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்.

முதலமைச்சர் வேண்டாம் என்று சொல்கிறார். சம்பந்தப்பட்ட அமைச்சர் போட வேண்டும் என்று சொல்கிறார் என்று செய்தி வெளியாகிறது. எங்கேயாவது அப்படி நான் சொன்னேன் என்று நிரூபியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 8 வழிச்சாலை போட வேண்டும் என்று எப்போதாவது நான் அறிக்கை, பேட்டி கொடுத்திருக்கிறேன் என்று யாராவது நிரூபிக்க முடியுமா?" என்று ஆவேசமாக கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in