ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள்; யாருக்கு எந்த சின்னம்?- இன்று முடிவாகிறது

தேர்தல் கட்டுப்பாட்டு அறை
தேர்தல் கட்டுப்பாட்டு அறை

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும்  இடைத்தேர்தலில்  வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்பதால் இன்று மாலையே எத்தனை வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்?  யாருக்கு எந்த சின்னம் என்பதெல்லாம்  முடிவாகும். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவேரா திருமகன் உடல் நலக்குறைவால் இறந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து  வரும் 27-ம் தேதி அங்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் போட்டியிடுவதற்காக மொத்தம்  96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை  வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள். அதற்கான நேரம் மாலை 3 மணியுடன்  முடிவடைந்ததும்  காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சிகளின்  சின்னம் ஒதுக்கப்படும். சுயேட்சை வேட்பாளர்கள் தாங்கள் விரும்பிய மூன்று  சின்னங்களில் இருந்து ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  ஒரே சின்னத்தை ஒருவருக்கு மேல் கேட்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 

இதற்கான நடைமுறைகள்  தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி நடைபெறும் என்று தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்றைய தினம் சின்னங்களும் ஒதுக்கப்பட்டு விடும் என்பதால்  இனி சுயேட்சை வேட்பாளர்களும் சூடு பறக்க களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in