`23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன'- சி.வி சண்முகம், கே.பி.முனுசாமி அறிவிப்பால் அதிர்ந்த ஓபிஎஸ்!

`23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகின்றன'- சி.வி சண்முகம், கே.பி.முனுசாமி அறிவிப்பால் அதிர்ந்த ஓபிஎஸ்!

பொதுக் குழு தீர்மானங்கள் நிராகரிக்கப்படுவதாக சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. முனுசாமி பொதுக்குழு நடைபெறும் மேடையில் அறிவித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதையடுத்து, வைகைச் செல்வன் வரவேற்புரையாற்றினார். அப்போது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர்ந்த கண்டன குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. வைகைச் செல்வன் உரையாற்றும் போதே குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், “அனைத்து பொதுக்குழுத் தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது. நிராகரிக்கிறது. நிராகரிக்கிறது” என உரத்த குரலில் தெரிவித்தார். இதை வரவேற்கும் விதமாக தொண்டர்கள் விசில் எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதைத் தொடர்ந்து பேசிய வளர்மதி, “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” எனப் பாடல் பாடி நமக்காக ஒருதலைவன் வருவான் என்றார்.

அடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்துவிட்டார்கள். ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்ற ஒரேயொரு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து தீர்மானம் எப்போது கொண்டு வரப்படுகிறதோ அப்போதுதான் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்” என்றார். இதனால் பொதுக்குழுக் கூட்டத்தில் பரபரப்பு நிலவிவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in