‘நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து அதிமுக வெற்றிபெறும்’ - ஈபிஎஸ் நம்பிக்கை

ஈபிஎஸ்
ஈபிஎஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ அதிமுகவை முடக்கவேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. அதிமுகவில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்த திமுக நினைக்கிறது. அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத திமுக கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது” என தெரிவித்தார்

மேலும், “அதிமுக உடையவில்லை ஒன்றாகவே இருக்கிறது என்பதை இந்த மாபெரும் பொதுக்கூட்டம் காட்டுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடுபொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in