விவசாயிகள் மீது குண்டாஸ்; எச்சரித்த அதிமுக... எடுத்ததும் களமிறங்கும் பாஜக!

அதிமுக பாஜக
அதிமுக பாஜக

திமுகவுக்கு எதிரான விஷயங்களில் யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி அதிமுக - பாஜக இடையே தொடர்ந்து நடந்து வருகிறது. அது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட விவகாரத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இபிஎஸ்
இபிஎஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிராக கடந்த 126 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் 20 பேர் கைதும் செய்யப்பட்டனர். இவர்களில் அருள், பச்சையப்பன், மாசிலாமணி, தேவன், பாக்யராஜ், சோழன், விஜயன் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார், ‘’விவசாயிகள் மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்’’ என எச்சரித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

’’ திமுக அரசின் இந்த கோழைத்தனமான செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த பாசிச திமுக அரசிடம் இருந்து, போராடும் விவசாயிகளை பாதுகாக்க அவர்கள் குடும்பங்களுக்கு முழு ஆதரவையும் சட்ட உதவியையும் தமிழக பாஜக வழங்கும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என நேற்று தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார் அண்ணாமலை. போராட்டம் நடத்துவது குறித்து எந்தவிதமான அறிவிப்பு வெளியிடாத நிலையில்,

இந்த நிலையில், எடப்பாடியாரின் எச்சரிக்கை அறிக்கை வெளியான அடுத்த ஒரு மணி நேரத்தில், பாஜக சார்பில் நாளை திமுகவை கண்டித்து திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்தார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். ‘’அண்ணாமலை என்ன ஸ்கோர் செய்யலாம் என நினைத்தாலும் அது நடக்காது. மக்களுக்காக மக்களுடன் இணைந்து நிற்கும் இயக்கம் அதிமுக. அதனால் எங்கள் எடப்பாடியார் அறிவித்தார் என்றதும் முந்திக் கொண்டு அண்ணாமலை அறிவிப்பது நகைப்பாக உள்ளது’’ என அதிமுக தரப்பில் கமென்ட் அடித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in