அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவோம்:  ஓபிஎஸ்  அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப்போட்டியால் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என அக்கட்சி பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆதரிப்போம். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்குக் காரணமாக இருக்கமாட்டேன்.

தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். பி படிவத்தில் கையெழுத்திட தயாராகவே இருக்கிறேன். இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது. அந்தச் சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in